தடுப்பூசியை தொடர்ந்து கரும்பூஞ்சை நோய்க்கான மருந்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு.! மதுரை எம்.பி குற்றச்சாட்டு.!

தடுப்பூசியை தொடர்ந்து கரும்பூஞ்சை நோய்க்கான மருந்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு.! மதுரை எம்.பி குற்றச்சாட்டு.!

கரும்பூஞ்சை மருந்தை ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து ஒருஅளவு மீண்டு வரும் நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கரும்பூஞ்சை நோயை தொற்று நோயாக அரசு அறிவித்தது. மேலும் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை ஒன்றிய அரசு அவசரமாக இறக்குமதி செய்து அதை மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது.

கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தாக அம்போடேரிசின்-பி என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், தற்போது கரும்பூஞ்சை நோய்க்கான மருந்து விநியோகத்திலும் தமிழகத்தை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இது குறித்து மதுரை மக்களவை தொகுதியின் எம்.பியான சு.வெங்கடேசன் கருப்பு பூஞ்சை நோய்க்கானஅம்போடேரிசின்-பி மருந்தை கர்நாடகத்துக்கு அதிகமாகவும்,  தமிழகத்துக்கு குறைவாகவும் ஒதுக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கருப்பு பூஞ்சை நோய்க்கான
அம்போடேரிசின்-பி மருந்து தமிழகத்துக்கு 8520 ம், கர்நாடகத்துக்கு 24,950ம் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பாரபட்சமற்ற அணுகுமுறை தேவை.ஒன்றிய அரசே, தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கு" என கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.