கருப்பு பூஞ்சை நோய்க்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!  

கருப்பு பூஞ்சை நோய்க்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!  

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விடும் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனும் நோய் பரவிவருகிறது. இந்த நோய் அதிகபட்சமாக உயிரிழப்பையும் ஏற்படுத்திகிறது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கூட பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

தமிழகத்திலும் இதுவரை 900க்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இது குறித்து மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ள அறிக்கையில் 

மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போரின் ரத்தத்தின் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.வீட்டுத் தனிமையில் இருப்போரின் ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும்.
இரவு உணவுக்கு முன், கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் & நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கணக்கிட வேண்டும்.

சர்க்கரை அளவு அதிகமாக இருப்போருக்கு ஸ்ட்ராய்டு உடன் சேர்த்து ஆக்ஸிஜனும், இன்சுலினும் செலுத்த வேண்டும். 3 வேளை உணவுக்கு முன், கண்டிப்பாக இன்சுலின் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவு 400-ஐ விட அதிகமாக இருப்பின், ஒருமணி நேரத்துக்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும்.

நோயாளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருத்தல் வேண்டும்.ஸ்ட்ராய்டு எடுத்துக்கொள்வோருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதால், அதற்கான சிகிச்சையில் இன்சுலினை சேர்க்க வேண்டும் என்று மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.