தமிழகத்தின் அனைத்துக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.! -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! 

தமிழகத்தின் அனைத்துக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.! -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! 

தமிழகத்தின் அனைத்துக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். எந்தெந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை என்று கண்டறியப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டெடுக்கும் பணி இன்று சாலிகிராமதில் நடைபெற்றது. 

இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு "சாலிகிராமத்தில் கருணாநிதி தெருவில் 250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனம் நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அது மீட்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து உள்ளோம், அதற்குள் அவர்கள் அந்த வாகனத்தை எடுத்து கொள்ள வேண்டும். தற்போது மீட்டநிலம்  வடபழனி திருக்கோவிலுக்கு வழக்கப்பட்டது. இங்கு வாகன நிறுத்துவதற்கு யாரும் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை அவர்கள் கூறுவது உண்மை இல்லை" எனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் டிரைலர்  தான் மேயின் பிச்சரை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள். கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும் கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும்" எனக் கூறினார். 


மேலும் "தமிழகத்தின் அனைத்துக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். எந்தெந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை என்று கண்டறியப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நடவடிக்கையை துரிதப்படுத்துவோம்" என்ற அவர் "பிஜேபி நாங்கள் இருக்கிறோம் என்பதற்கு எதோ பேசி இருப்பார்கள்.  நல்லது என்றால் அதை ஏற்று கொள்வோம் இல்லை என்றால் அதை ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்தார்.