நடிகை அஞ்சலிக்கு திருமணமா? ரசிகர்கள் கவலை

திருமணம் என்று தெலுங்கு வட்டாரத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலிக்கு திருமணமா? ரசிகர்கள் கவலை

கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.  தெலுங்கில் 'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார் நடிகை அஞ்சலி.

தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். அடிக்கடி அஞ்சலி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகும்.  

அதே போல் இப்போதும் நடந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அஞ்சலி திருமணம் செய்துக் கொள்வார் என தெலுங்கு வட்டாரத்தில் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஞ்சலி.