நாங்க திரும்ப தாய்வீட்டுக்கே வருகிறோம்... மேற்குவங்க அரசியலில் பரபரப்பு...

நாங்க திரும்ப  தாய்வீட்டுக்கே வருகிறோம்... மேற்குவங்க அரசியலில் பரபரப்பு...

தேர்தலுக்கு முன்னால் பாஜகவுக்குத் தாவிய திரிணாமூல் தலைவர்கள் சிலர் மீண்டும் திரிணாமூல் கட்சியில் இணைய கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோனாலி குகா மற்றும் சரளா முர்மு ஆகியோருடன் தற்போது பாஜகவுக்குத் தாவிய தீபேந்து பிஸ்வாசும் மீண்டும் திரிணாமூல் கதவைத் தட்டியுள்ளார். இவர்கள் தங்கள் கடிதத்தில் மம்தாவிடம் பாஜகவுக்குத்தாவிய தங்கள் முடிவு மோசம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் தான் பாஜகவுக்குத் தாவியது தவறான முடிவு என்றும் கட்சியை விட்டு விலகியது உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதனால் செயலிழந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் திரிணாமூலுக்கே திரும்புவதாகவும் தீபேந்து பிஸ்வாசும் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

இதேபோன்று முன்னாள் திரிணாமூல் தலைவர் சோனாலி குகா, தான் கட்சியை விட்டு விலகி பாஜகவுக்குத் தாவியதற்கு தன் கடிதத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார். தானும் உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுத்து விட்டதாக இப்போது மம்தாவிடம் கெஞ்சியுள்ளார்.

இவர்களோடு திரிணாமூல் கட்சியை விட்டுச்சென்ற மேலும் சிலரும் மம்தா வீட்டுக் கதவை தட்டி வருவதால் மேற்குவங்க அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.