இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்... மக்களே வெளியே போகாதிங்க..

இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்... மக்களே வெளியே போகாதிங்க..

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் காலங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகாமல் இருந்தது சற்று ஆறுதலை தந்தது.

அப்போது பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. தற்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர வெப்பசலனம் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்  மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதேபோல், நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.