நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 8.3% வளர்ச்சி அடையும் !!

நடப்பாண்டில்  இந்திய பொருளாதாரம் 8.3% வளர்ச்சி அடையும் !!

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 2 ஆம் அலையின் பேரழிவால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, படுமோசமான நிலைக்கு தளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 8.3 சதவீதமாக வளர்ச்சியடையும் எனவும், இதுவே 2022-23 நிதியாண்டில் 7.5 சதவீத அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சியை காணும் என உலக வங்கி கணித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உலக பொருளாதாரம் நடப்பாண்டில் 5.6 சதவீதமாகவும் உலக வங்கி கணித்துள்ளது.