2 டிஜி மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

கொரோனா நோயாளிளுகளுக்கு 2 டிஜி மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

2 டிஜி மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக 2 டிஜி மருந்தை உருவாக்கியுள்ளது.  இம்மருந்து கொரோனா நோயாளிகளை வெகுவாக குணப்படுத்துவதும், ஆக்சிஜன் சார்பு நிலையை குறைப்பதும் பரிசோதானை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து நோயாளிகள் வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு 2 டிஜி மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 டிஜி மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி கர்பிணிகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இதனை பரிந்துரைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.