இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்விங்களா? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்விங்களா? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு ஏன் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை தொடர்பான பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு ஏன் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து, மாநிலங்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளிப்பது தான் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையா எனவும் கடுமையாக கேள்வியெழுப்பியது.

மேலும் நாங்கள் கொள்கைகளை வகுக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள் மத்திய அரசாகிய எங்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியும் என சுலபமாக கூறிவிட்டு தப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாக தாக்கினர். மேலும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.