தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்: பாடல்கள் வெளியீடு

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் 4வது பாடல் இன்று வெளியாகியுள்ளன.

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்: பாடல்கள் வெளியீடு

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் 4வது பாடல் #AalaOla வெளியானது.