உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி… எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி…  எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, நாளை முதல் ஜூன் 13ம் தேதி வரை வடக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.