பெரியவர்களை மட்டும் தாக்கி வந்த கருப்பு பூஞ்சை நோய் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை: 2 சிறுவர்களுக்கு தொற்று பாதித்து கவலைக்கிடம்...

பெரியவர்களை  மட்டும் தாக்கி வந்த கருப்பு பூஞ்சை நோய் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை: 2 சிறுவர்களுக்கு தொற்று பாதித்து கவலைக்கிடம்...

கர்நாடகாவில் இரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி கடும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய பிரச்னையாக கருப்பு பூஞ்சை எனும் நோய் கொரோனா பாதித்து குணமடைந்த நோயாளிகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது  கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்ட பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கும், சித்திரதுர்கா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இரண்டு சிறுவர்களின் உடல் நிலை மிக மோசமாக இருப்பாதாக மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. கொரோனா தாக்கிய சில பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதும் இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் சிறுவர்களுக்கும் பாதித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.