இலவச தடுப்பூசி, ரேஷன் பொருட்கள் வழங்குவதை ஈடுகட்ட அரசுக்கு கூடுதலாக 80ஆயிரம் கோடி செலவு...

அனைவருக்கும் இலவச தடுப்பூசி, ரேஷன் பொருட்கள் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இதனை ஈடுகட்ட கூடுதலாக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வௌியாகியுள்ளது.

இலவச தடுப்பூசி, ரேஷன் பொருட்கள் வழங்குவதை ஈடுகட்ட அரசுக்கு கூடுதலாக 80ஆயிரம் கோடி செலவு...

அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி மற்றும் வருகிற நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை செயல்படுத்த கூடுதலாக  80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஏழை மக்களுக்காக உணவு பொருட்கள் வினிியோகம் செய்ய  70 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல்  செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல்   10 ஆயிரம் கோடி ரூபாய்  இலவச தடுப்பூசிக்காக ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய வங்கியிடம் இருந்து மத்திய அரசு 99 ஆயிரத்து 120 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட தொகை இலவச  திட்டங்களுக்கு  செலவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே  இலவச தடுப்பூசி மற்றும்  உணவு பொருட்கள்  வழங்குவது குறித்து விவாதிக்க நாளை  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதால் ஏற்படும் நிதிசுமை குறித்தும் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து முடிவு எட்டப்படும் என டெல்லி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.