ஓட்டளிக்க வந்த விஜய்-யின் புது போட்டோக்கள் வைரல்

ஓட்டளிக்க வந்த விஜய்-யின் புது போட்டோக்கள் வைரல்

கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஓட்டளிக்க வந்தபோது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது முன்னணி நடிகர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். அந்த வகையில், காலையிலேயே வாக்களிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்து பலரது கவனத்தை ஈர்த்தார்.

மேலும் கருப்பு மாஸ்க் அணிந்திருந்ததும் அனைவரையும் கவனிக்க வைத்தது. பெட்ரோல் விலை உயர்வை சுட்டும் வகையில் விஜய் சைக்கிளில் வந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். எனினும் அதற்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் ஓட்டளித்த புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது யாரும் பார்க்காத புதிய சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.